Wednesday, September 17, 2014

Oxalic triangularis - Purple Shamrock

 Oxalic triangularis - Purple Shamrock

Ajantha's Garden/ Oxalic triangularis - Purple Shamrock
 Oxalic triangularis - Purple Shamrock-Day time open leaves
இத்தாவரத்தின் இலைகள் முக்கோண (Triangular shape) வடிவமைப்புடையவை. பகல் நேரங்களில்  அல்லது சூரிய வெளிச்சம் நன்றாக உள்ளபோது இவற்றின் இலைகள் விரிந்தும், இரவு நேரங்களில் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் இலைகள் நன்றாகக் குவிந்தும் காணப்படும். இம்மாற்றம் நடைபெறுவது இவ்விலையின் அடிப்பகுதியிலுள்ள கலங்களின் விறைப்பு அல்லது அழுத்த மாற்றத்தினாலேயே நடைபெறுகின்றது.
      இவை கூடுதலாக வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரம். இத்தாவரம்  15 டிகிரி செல்சியஸ் ( 60 டிகிரி பாரனைற்)உட்புற  வெப்பநிலையிலும் வாழும். இதற்கு  பிரகாசமான அல்லது நேரடி சூரிய ஒளி தேவைப்படுகிறது. இத்தாவரத்திற்கு  வெப்பநிலை27 டிகிரி செல்சியஸ் (80 டிகிரி)பாரனைற்  மேலே சென்றால் ஒரு "சோர்வான " தோற்றத்தை கொடுக்கும்.  சாதாரண பூச்சாடிகளுக்குப் பயன்படுத்தும் மண் போதுமானது.
     இத்தாவரம் கிழங்குகள் ( bulbs) மூலம் உருவாக்கப்படும். இவை கோடை கால முடிவில் உறங்கு நிலைக்குச் சென்று. திரும்பவும் கோடை காலம் ஆரம்பிக்கும்போது  உருவாகும். இத்தாவரத்தின் முதிர் தாவரங்கள் 3-5 வருடத்திற்கொரு முறையும், இளநிலைத் தாவரங்கள் வருடத்திற்கொரு முறையும் வளரும்.

பகல் நேரங்களில்  அல்லது சூரிய வெளிச்சம் நன்றாக உள்ளபோது
இரவு நேரங்களில் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் இலைகள் நன்றாகக் குவிந்து காணப்படும்.
 
Ajantha's Garden/ Oxalic triangularis - Purple Shamrock -Night time-Sleeping leaves


Oxalic triangularis - Purple Shamrock

Oxalic triangularis - Purple Shamrock
இரவு நேரங்களில் இலைகள் குவிந்து காணப்படும்.

Ajantha's Garden/Oxalic triangularis - Purple Shamrock
இரவு நேரங்களில் இலைகள் குவிந்து காணப்படும்.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...